தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 41 பேர் என மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மூன்று பேர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது ஆனால் இவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் வேறு யாருக்கும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர்
 
தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 41 பேர் என மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மூன்று பேர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது

ஆனால் இவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் வேறு யாருக்கும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தமிழகத்தில் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா அறிகுறி என்று சந்தேகிக்கப்பட்ட 72 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபரும் தனி வார்டில் கண்காணி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

From around the web