கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஏற்கனவே இரண்டு உயிர்களை பலி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள 76 வயது முதியவர் ஒருவரும் டெல்லியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்த 64 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இதனையடுத்து கொரோனா வைரசால் உயிரிழந்த இந்தியர்களின்
 
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஏற்கனவே இரண்டு உயிர்களை பலி வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள 76 வயது முதியவர் ஒருவரும் டெல்லியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவரும் கொரோனா வைரசால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வந்த 64 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் இதனையடுத்து கொரோனா வைரசால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இருப்பினும் மும்பையில் இறந்த நபர் கொரோனா வைரசால் தான் உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web