மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்ற தகவல் திமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ
 

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்ற தகவல் திமுகவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் ஆகியோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மின் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதில் ஒருசில அமைச்சர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web