மீண்டும் ஒரு வாய்ப்பு: ஆதார்-பான் இணைக்க அவகாசம்!


 

 
aadhar pan

ஆதார் எண் மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டும் என கடந்த பல மாதங்களாக மத்திய அரசு தெரிவித்து வரும் நிலையில் ஜூன் 30ஆம் தேதி தான் ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதி என்று கூறப்பட்டுள்ளது. அதற்குள் ஆதார்-பான் இணைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இதற்கு மேலும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அதனால் ஆதார் கார்டு பான் எண்ணை இதுவரை இணைக்காதவர்கள் உடனடியாக இந்த காலகட்டத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பதினெட்டு வகையான பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் என்பதால் அனைவரும் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web