ஏடிஎம்மில் பணம் வரவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி 

 

ஏடிஎம் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகி விட்டது என்பதும், இப்பொழுது பணம் எடுக்க வங்கிக்கு செல்வது கிட்டத்தட்ட நின்றே விட்டது என்று கூறலாம் 

இந்த நிலையில் சில சமயம் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது பணம் நமது கணக்கில் இருந்து கழிந்துவிட்டதாக எஸ்எம்எஸ் வரும். ஆனால் ஏடிஎம் கோளாறு அல்லது இன்டர்நெட் கோளாறு காரணமாக பணம் வராமல் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அந்த பணம் ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்

இந்த நிலையில் இது போன்ற பிரச்சனை ஏற்படும் காலங்களில் வங்கிகள் பணம் வரவு வைக்க கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரில் மீது நடவடிக்கை எடுத்துள்ள ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்களுடைய பணத்தை வரவு வைக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் நூறு ரூபாயை இழப்பீடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வழங்க வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளது 

இந்த அதிரடி அறிவிப்பால் வங்கிகள் அதிர்ச்சி அடைந்தாலும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களின் பணத்தை வரவு வைக்கும் என்று எதிர்பார்ப்போம்

From around the web