மணப்பாறை எம்எல்ஏ டிரைவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு உத்தரவை பிறப்பித்தது மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களையும் அவர் கூறினார்.மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தங்க நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் ஐடி சோதனை நிகழ்கிறது. அதன்படி தற்போது வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் மணப்பாறை எம்எல்ஏ, அதிமுக வேட்பாளருமான சந்திரசேகர் நிறுவனத்தில் ஓட்டுநர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வலசு பட்டியை சேர்ந்த அழகர்சாமி, கோட்டை பட்டியை சேர்ந்த ஆனந்த் என்ற முருகானந்தம் ஆகியோர் வீடுகளில் ஐடி சோதனை நடத்தப்பட்டது.
வீட்டில் இருந்த வைக்கோல் போரில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை சோதனை அதிகாரிகள். மேலும் பணத்தை பறிமுதல் அழகர்சாமி அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.