மீண்டும் மூடப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில்: பக்தர்கள் பரபரப்பு

கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் சமீபத்தில் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே முதலில் கோவில் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அதன் பிறகு உள்ளூர் மக்களும் தற்போது அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கிருமிநாசினி வைத்து அவ்வப்போது கைகளை கழுவ
 
மீண்டும் மூடப்படுகிறது திருப்பதி ஏழுமலையான் கோவில்: பக்தர்கள் பரபரப்பு

கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் சமீபத்தில் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே

முதலில் கோவில் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அதன் பிறகு உள்ளூர் மக்களும் தற்போது அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கிருமிநாசினி வைத்து அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயலாளர் அலுவலர் அனில்குமார் அவர்கள் கூறியபோது:

ஜூன் 21ம் தேதி காலை 10 மணி 18 நிமிடத்தில் இருந்து மதியம் 1 மணி 38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் முன்கூட்டியே 21-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு கோவிலின் நடை சாத்தப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு திறக்கப்படும். மேலும் கிரகணம் முடிந்த பின்னர் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.

From around the web