காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன? அதிர்ச்சித் தகவல்

பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தற்போது புதிய குழப்பமாக காலாண்டு அரையாண்டு தேர்வு எழுத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த விதிமுறைகள் தெளிவாக பள்ளி கல்வித்துறை வெளியிடாததால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
காலாண்டு அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் நிலை என்ன? அதிர்ச்சித் தகவல்

பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காலாண்டு அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது புதிய குழப்பமாக காலாண்டு அரையாண்டு தேர்வு எழுத மாணவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த விதிமுறைகள் தெளிவாக பள்ளி கல்வித்துறை வெளியிடாததால் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி ஒருசில பள்ளிகள் தற்போது தனியாக காலாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்திக் கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இல்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

இந்த குழப்பங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web