ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னும் பழைய காசோலைகள் செல்லும்!

 

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஒரு சில வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லாது என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது பழைய காசோலைகளாக இருந்தாலும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் ஒரு சில சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது என்பதும் அதன்படி ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் இணைக்கப்பட்டன. மேலும் அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடனும் இணைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

cheque,

இந்த நிலையில் இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செல்லாது என கூறியதை அடுத்து அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து புதிய வங்கிகளின் காசோலைகளை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர் 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பழைய வங்கிகளின் காசோலைகள் தொடர்ந்து செல்லும் என்றும் இருப்பினும் விரைவில் புதிய வங்கிகளின் காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web