சரியா "14ஆம் தேதி 12 மணிக்கு" எம்எல்ஏக்கள் மட்டும் வாங்க; யாருக்கும் அனுமதி கிடையாது!

ஜூன் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
eps ops

சில தினங்களுக்கு முன்பாக நம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையை இழந்து தற்போது எதிர்கட்சியாக உள்ளது அதிமுக. முன்னதாக இந்த கட்சி 10 ஆண்டுகளாக தொடர்ந்து இரு முறை தமிழகத்தில் ஆட்சி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கட்சியில் தலைமையில் அவ்வப்போது பிரச்சனைகளும் குழப்பங்களும் இருந்து கொண்டே உள்ளது வாடிக்கையாக காணப்படுகிறது.  இந்த சூழலில் சில தினங்கள் முன்பாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சென்று கட்சி கூட்டம் நடப்பதற்கு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார்.admk

அதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து ஜூன் 14-ஆம் தேதி அதிமுக கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அதில் சட்ட மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்தார்கள் என்றும் கூறினார். தற்போது அதிமுக கட்சியின் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 14-ம் தேதி மதியம் 12 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டமானது ராயப்பேட்டையில் நடக்கிறது என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி கூறியுள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களை தவிர வேறு யாரும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

From around the web