சீன நிறுவனங்களை முழுவதுமாக தடுக்க முடியாது: வணிகத்துறை உயர் அதிகாரிகள் தகவல்

சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் சிலர் வீரமரணமடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்திற்கு பிறகு சீனாவின் 59 செயலிகளை அதிரடியாக இந்திய அரசு தடை விதித்தது அதற்குப் பிறகும் சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரயில்வே துறை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வரித்தக இணைப்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டது என்றே கருதப்பட்டது
 
சீன நிறுவனங்களை முழுவதுமாக தடுக்க முடியாது: வணிகத்துறை உயர் அதிகாரிகள் தகவல்

சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் சிலர் வீரமரணமடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்திற்கு பிறகு சீனாவின் 59 செயலிகளை அதிரடியாக இந்திய அரசு தடை விதித்தது

அதற்குப் பிறகும் சீனாவின் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரயில்வே துறை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வரித்தக இணைப்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டது என்றே கருதப்பட்டது

இந்த நிலையில் இந்தியாவில் சீன நிறுவனங்களை முழுமையாக தடுத்துவிட முடியாது என வணிகத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் இருந்து மின் கருவிகள், மின்னணு கருவிகள், செல்பேசிகள் கணினிகள் ஆகிய்வைகளுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த கருத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்

சீனாவின் முதலீடுகள் சில முக்கியமானவை என்பதால் அவற்றை முழுமையாக தடை செய்ய இயலாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web