வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து கொண்ட அதிகாரிகள்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் ஆறாம் தேதி ஆகிய நாளைய தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் நாளைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் 234 தொகுதிகளிலும் அதற்கான வேலைகள் தேர்தல் அதிகாரிகள் மிகவும் தீவிரமாகவும் ஈடுபடுகின்றனர். மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. அவர் செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை வெளியிட்டார்.

மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் தங்களது வேலையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தலையில் சுமந்து நடந்ததாக தகவல் வெளியானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களில் தேர்தல் அதிகாரிகள் மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல தலையில் வைத்து நடந்ததாக தகவல்.நாமக்கல் மாவட்டத்தில் மேலும் போதமலை மலை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு 8 கிலோமீட்டர் தூரம் உள்ளதால் தேர்தலில் நடந்தே தங்கள் தலையில் வைத்துக்கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியது