கழிவுநீர் தொட்டியில் பலியான அலுவலர்: தாமாக முன்வந்து பதிவான வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற 24 வயது மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் கடந்த 7ஆம் தேதி திடீரென மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். நகராட்சியின் அலட்சிய போக்கால் தான் கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் இருந்ததாகவும் அரசு அதிகாரி பலியானதற்கு நகராட்சி நிர்வாகமே காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: ''மக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளை நிறைவேற்றும் தனது ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநில அரசு முதன்மையாகத் தவறிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் ஊழியரின் வாழ்க்கையையும், கண்ணியத்தையும் பாதுக்காக்க தவறிய தமிழக அரசு, அரசு அலுவலகத்தில் அடிப்படை வசதியை வழங்கத் தவறிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்த விவகாரத்தை குறித்து விரிவான பதில் அளித்தும் 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.