கட்டுமானப் பொருளுக்கு ஆதரவாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்!

கட்டுமான பொருட்களின் விலைகளை குறித்து தமிழக அரசுக்கு வலியுறுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்
 
ops

நம் தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது அதிமுக, மேலும் அதிமுக கடந்த இரண்டு தேர்தலில் பெரும்பான்மை பிடித்து ஆட்சியை தக்க வைத்திருந்தது என்றே கூறலாம். ஆனால் இந்த தேர்தலில் அவை சட்டென பெரும்பான்மை இழந்து தற்போது எதிர்கட்சியாக உள்ளது என்று கூறலாம். இருப்பினும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளும் ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியாக உருவான பின்னர் கட்சிக்குள் யார் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்கள் என்று அவ்வப்போது சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தன.government

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி? ,துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்? என்று கேள்விகள்  கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எழுந்தன. அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவராக அனைவரும் ஒருமித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தனர். தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர் அப்போது தமிழகத்திற்கு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். மேலும்  தற்போது அவர் தமிழக அரசுக்கு ஒரு வலியுறுத்துகிறதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் கட்டுமான பொருட்கள் குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web