பிப்ரவரி 20ஆம் தேதி ஓபிஎஸ்-ஈபிஎஸ் டெல்லி பயணம்: என்ன காரணம்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பிப்ரவரி 20-ஆம் தேதி டெல்லி பயணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகம் பிப்ரவரி 21 ஆம் தேதி திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைப்பு விடுப்பதற்காக முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து ஆலோசனை செய்யவும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை செய்யும் முதல்வர் மற்றும் துணை முதல்வர், அதிமுக-அமமுக இணைப்பு குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்