முதல்வரின் அறிவிப்புக்கு "ஓ.பன்னீர்செல்வம்" வரவேற்பு!

பெரியார் பிறந்த நாள் குறித்து முதல்வர் அறிவிப்புக்கு ஓ பன்னீர்செல்வம் வரவேற்பு அளித்துள்ளார்
 
ops

தற்போது தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். சட்டப்பேரவையில் சில முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார். மேலும் அவற்றை எதிர்க்கட்சியும் ஒரு சில அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறது.periyar

அதன் வரிசையில் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ள அதிமுக கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளராக உள்ளார் பன்னீர்செல்வம். அவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.வைக்கம் வீரர், சமூக சீர்திருத்தவாதி என்று மக்களால் அழைக்கப்பட்ட பெரியாரின் பிறந்த நாள் பற்றி சட்டப்பேரவையில் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். பெரியார் கருத்துக்களை அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சியின் அறிவிப்புகளுக்கு அப்போது எதிர்க்கட்சியினரும் வரவேற்பது தெரியவந்துள்ளது.

From around the web