நியூமராலஜிப்படி பெயரைத் திருத்திய எடியூரப்பா!!

தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது அதில் உள்ள சில எழுத்துக்களை கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, Yeddyurappa என்று குறிப்பிட்டு வந்த அவர், இப்போது என்று பெயரை Yediyurappa திருத்தியுள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதியிருந்த கடிதத்தில் இந்த மாற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனினும் தற்போது புதிதாக மாற்றியுள்ள ஆங்கில எழுத்துக்களைத்தான் 2007ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா இதற்கு முன் 3 முறை முதல்வராக இருந்த போதும்
 

தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது அதில் உள்ள சில எழுத்துக்களை கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள  எடியூரப்பா மாற்றிக்கொண்டுள்ளார். அதாவது, Yeddyurappa என்று குறிப்பிட்டு வந்த அவர், இப்போது என்று பெயரை Yediyurappa திருத்தியுள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதியிருந்த கடிதத்தில் இந்த மாற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

நியூமராலஜிப்படி பெயரைத் திருத்திய எடியூரப்பா!!


எனினும் தற்போது புதிதாக மாற்றியுள்ள ஆங்கில எழுத்துக்களைத்தான் 2007ம் ஆண்டுக்கு முன்பு பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பா இதற்கு முன் 3 முறை முதல்வராக இருந்த போதும் ஒரு முறையும் ஆட்சிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் நியூமராலஜிபடி பெயரை திருத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக எண் கணித ஜோதிடம் என்றழைக்கப்படும் நியூமராலஜி படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் தங்களுடைய பெயர்களில் சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டனர். 

நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள், தங்களுடைய பெயர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதுவழக்கம். பத்திரிகைகளில் கூட, பெயர் மாற்றம் என்று விளம்பரங்கள் வருவதை அடிக்கடி காண முடியும். 


From around the web