வேட்புமனு தாக்கல் முடிவு பெற்ற நிலையில் வேட்பாளர்களை அறிவித்த என் ஆர் காங்கிரஸ்!

என் ஆர்  காங்கிரஸ் கட்சியானது வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்த பின்பு தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது!
 
வேட்புமனு தாக்கல் முடிவு பெற்ற நிலையில் வேட்பாளர்களை அறிவித்த என் ஆர் காங்கிரஸ்!

சட்டமன்றத் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியில் நடைபெற உள்ளது.இதில் புதுச்சேரியில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணியில் உள்ளது. மொத்தம் புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ளன.  என்ஆர் காங்கிரஸ் கட்சியானது 16 தொகுதிகளிலும், பாஜக  10 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. மேலும் அதிமுக நான்கு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

rangasamy

இந்நிலையில்என் ஆர் காங்கிரஸ் கட்சியானது தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் இன்றைய தினமே  வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி தினம்  என்று அறிவித்த நிலையில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி ஏனாம் ,தட்டாஞ்சாவடி போன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார் எனவும் வெளியாகியுள்ளது.

அது தொடர்ந்து ராஜ்பவனில் லட்சுமி நாராயணனும்  போட்டியிடுகிறார் தகவல் வெளியானது. தேர்தல் ஆணையம்  வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மாலை 3 மணி தான் என்று கூறி இந்த நிலையில் மூன்று மணிக்கு பின்னர் என் ஆர்  காங்கிரஸ் கட்சியானது தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

From around the web