சும்மா உட்கார்ந்து கொண்டே இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த இளைஞர்: என்ன ஒரு ஆச்சரியம்

இந்தோனேசியாவை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர் கேமரா முன்பு இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ மிகப்பெரிய வைரலாகி இரண்டே மணி நேரத்தில் சுமார் 2 மில்லியன் பேர்களுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் வந்துள்ள நிலையில் இந்த வீடியோவில் அந்த இளைஞன் வேறு ஒன்றுமே செய்யாமல் இரண்டு மணி நேரமும் சும்மாவே உட்கார்ந்து இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது அதைவிட பெரிய
 

சும்மா உட்கார்ந்து கொண்டே இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த இளைஞர்: என்ன ஒரு ஆச்சரியம்

இந்தோனேசியாவை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர் கேமரா முன்பு இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோ மிகப்பெரிய வைரலாகி இரண்டே மணி நேரத்தில் சுமார் 2 மில்லியன் பேர்களுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவுக்கு பல்வேறு விதமான கமெண்ட்கள் வந்துள்ள நிலையில் இந்த வீடியோவில் அந்த இளைஞன் வேறு ஒன்றுமே செய்யாமல் இரண்டு மணி நேரமும் சும்மாவே உட்கார்ந்து இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

அதைவிட பெரிய ஆச்சரியம் என்னவெனில் இந்த சும்மா உட்கார்ந்திருக்கும் வீடியோவை பலர் முழுமையாக பார்த்து அவர் எத்தனை முறை இந்த இரண்டு மணி நேரத்தில் கண்சிமிட்டியுள்ளார் என்பதையும் எண்ணியுள்ளனர்.

இந்த ஒரே வீடியோவால் அவருக்கு லட்சக்கணக்கில் வருமானம் கொட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமின்றி வித்தியாசமாக சிந்தித்தால் சும்மா உட்கார்ந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று இந்த இளைஞர் நிரூபித்துள்ளார்

From around the web