இரண்டு வேண்டாம் மூன்று வேண்டும்; காரணம் வேட்பாளர்கள் அதிகம்!

கரூர் வாக்கு எண்ணிக்கை ஆனது மூன்று அறைகளில் நடத்த வேண்டும் என்று அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்!
 
இரண்டு வேண்டாம் மூன்று வேண்டும்; காரணம் வேட்பாளர்கள் அதிகம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் தேர்தல் குறித்து சில தகவல்களையும் வெளியிட்டு வந்தார். மேலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்களைக் காட்டிலும் அதிகம் பெண்களே வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் தமிழகத்தில் முன்னர் அறிவித்த தேதி படியே வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் சில தகவல்களையும் கூறியுள்ளார்.

highcourt

அதன்படி தமிழகத்தில் எண்ணிக்கையானது இரண்டு அறைகளில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் 14 மேஜைகள் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது அதிமுகவின் அமைச்சரான விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அவர்  மூன்று அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அந்தப்படி அவர் கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இரண்டு அறையில் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் வேட்பாளர்களின் முகவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கரூர் சட்டமன்றத் தொகுதியில் 77 வாக்காளர்கள் களமிறங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது. 77 பேர் போட்டியிட்டு உள்ளதால் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கரூர் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகஅமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது தடுப்பு விதிகளைகளை முழுமையாக பின்பற்ற தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் 77 வேட்பாளர்களின் முகவர்கள் அனுமதித்தால் தனிமனித இடைவெளியை பின்பற்றாத முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரிக்கை வைத்துள்ளார்.

From around the web