ஆக்சிசன் உற்பத்தி மட்டுமில்லை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவுகிறது!

ஆக்சிசன் உற்பத்தி மட்டுமின்றி அதனை கொண்டு செல்வதிலும் இந்தியாவில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது!
 
ஆக்சிசன் உற்பத்தி மட்டுமில்லை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவுகிறது!

தற்போது மக்கள் மத்தியில் வலம் வரும் கண்ணுக்கு தெரியாத கொரோனாக்கு எதிராக நாடே போராடுகிறது. மேலும் இதற்கு தடுப்பூசிகள்  சேர்த்து ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியாவில் போதுமான பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது அப்போது தெரிகிறது. மேலும் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் உயிரிழப்பு நேரிடுவது அவ்வப்போது தெரிகிறது.  தமிழக அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் திறக்க அனுமதித்து ஆக்ஸிசன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளன.oxygen

எனினும்அத்துடன் உற்பத்தி மட்டுமின்றி அதனை கொண்டு செல்வதிலும் இந்தியாவில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதன்படி ஆக்சிசன் இந்தியாவில் உற்பத்தி அதிகரித்தாலும் அதனை கொண்டு உரிய இடங்களுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.இந்தியாவில் ஆக்சிசன் சுமந்து செல்வதற்காக 5000 டேங்கர் லாரிகள் மட்டுமே உள்ளதாக லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் 5000 டேங்கர் கிரையோஜெனிக் எஞ்சின் கொண்ட தாங்கள் 1700 டேங்கர் லாரிகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தென்மாநிலங்களில் 300 முதல் 400 பேர்டேங்கர் லாரிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் களும் போதிய அளவில் இல்லாததால்சாதாரண சரக்கு லாரிகளில் கொண்டு செல்வதில் மிகவும் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு கிரையோஜெனிக் எஞ்சின் டேங்கர் லாரிகள் வாங்க 60 லட்சம் முதல் 75 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறப்படுகிறது ஒரு டேங்கர் லாரியில் 16 டன் ஆக்சிஜனை கொண்டு செல்ல முடியும் என்று லாரி உரிமையாளர் ரமேஷ் அகர்வால் கூறியுள்ளார். மேலும் ஆக்சிசன் டேங்கர் லாரிகளை இயக்குனர்களுக்கும் போதிய அளவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 15 நாட்கள் பயிற்சி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் இந்தியாவில் ஆக்சிஜன்  உற்பத்தியோடு மட்டுமின்றி அதனை கொண்டு செல்வதிலும் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது தெரியவந்துள்ளது.

From around the web