குஷ்பு மட்டுமல்ல, பாஜகவில் இணைந்த மேலும் இருவர்

 

நடிகை குஷ்பு இன்று காலை அதிகாரபூர்வமாக தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முறைப்படி குஷ்பு பாஜகவில் இணைந்தார்.அவருக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உறுப்பினர் அட்டையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் இணைந்த பின் பேட்டி அளித்த குஷ்பு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் நாட்டை சரியான பாதையில் பிரதமர் மோடி எடுத்துச் செல்கிறார் என்றும் கூறினார். மேலும் மாற்றம் என்பது மனிதர்களின் இயல்பு என்றும், நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜகவில் இணைந்துள்ளேன்’ என்றும் குஷ்பு தெரிவித்தார். 

இந்த நிலையில் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பிரபலங்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் யூட்யூபில் வீடியோவை போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் மதன் ரவிச்சந்திரன் என்பதும் இன்னொருவர் முன்னாள் ஐ.ஆர்.எஸ்அதிகாரி சரவணகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

From around the web