சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்க வைத்தது! முதல்வர்!

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
 
சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்க வைத்தது! முதல்வர்!

மக்களுக்கு  தனது நகைச்சுவை மட்டுமின்றி சமூக நலன் மீது அக்கறையும் வேண்டும் என்பதற்கு என்பதில் முழுமூச்சாக தனது நகைச்சுவையை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் விவேக். மேலும் இவர் படத்தில் பல காட்சிகளில் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்திருப்பார். மேலும் இவர் பாரபட்சமின்றி அத்துணை நடிகர்களுடனும் சகஜமாக பழகும் இயல்பு கொண்டவர். மேலும் இவர் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். இத்தகைய சிறப்பு பெற்ற இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

vivel

மேலும் இவரது மரணம் தமிழகத்தின் திரையுலகத்தை கண்ணீருக்குள் தள்ளியது. மேலும் இவருக்கு அஞ்சலி செலுத்த காலை முதலே ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். மேலும் திரை பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இயக்குனர்கள் என அனைவரும் காலையில் வந்து அஞ்சலி செலுத்தினர் செய்தியாளர்கள் மத்தியில் சில தகவல்களையும் வெளியிட்டனர். மேலும் தற்போது இவரது உடல் தகனம் செய்யப்பட்டது.  தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியுள்ளார் சின்ன கலைவாணர் விவேக் மறைவுச் செய்தி அறிந்ததும் வேதனை அடைந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் 30 ஆண்டுக்கும் மேலாக திரையுலகில் சிறந்த நடிகராக தன் ஆளுமையை கோலோச்சியவர் என்றும் அவர் கூறினார். மேலும் எண்ணற்ற படங்களில் நடிகர் விவேக் நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி அனைவரையும் சிந்திக்கவும் வைத்தது என்றும் அவர் கூறினார். கலைச்சேவை சமூக சேவையால் பெருமை சேர்த்த விவேக்கின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் கூறினார். மேலும் அவர் பிளாஸ்டிக் தடை கொரோனா விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர் என்றும் அவர் கூறினார்.

From around the web