கொரோனா நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவிடாத மாநிலம்: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் நிதிகள் குவிந்தது என்பது தெரிந்ததே. தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உட்பட பலர் இந்த நிதியை அளித்து வந்தனர் இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 267 கோடி ரூபாய் நிதி திரண்டும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட அம்மாநில அரசு செலவு செய்யவில்லை என்ற தகவல், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு
 

கொரோனா நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவிடாத மாநிலம்: அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் நிதிகள் குவிந்தது என்பது தெரிந்ததே. தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் உட்பட பலர் இந்த நிதியை அளித்து வந்தனர்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 267 கோடி ரூபாய் நிதி திரண்டும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட அம்மாநில அரசு செலவு செய்யவில்லை என்ற தகவல், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிப்பு அடைந்து இருக்கும் நிலையில் கொரோனாவுக்காக திரட்டப்பட்ட நிதியை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கஜானாவில் பத்திரமாக வைத்திருக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

கொரோனாவில் கிடைத்த நிதியில் இருந்து மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் செய்வதை விட்டுவிட்டு அந்த பணத்தை சும்மா வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

கொரோனா வைரஸ்க்காக திரட்டப்பட்ட நிதியை வருங்காலத்தில் செலவழிப்போம் என கர்நாடக மாநிலத்தின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web