நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே மருத்துவ படிப்பில் சேர முடியாது: அதிர்ச்சி தகவல்!

 

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மருத்துவப் படிப்பு உறுதியாக சேர்ந்து விடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே மருத்துவ படிப்பில் சேர முடியாது என்று வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளிவந்து இன்று காலை அதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு தற்போது அந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வெளியாகி உள்ளது 

இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருப்பதால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருமே மருத்துவ படிப்பில் சேர முடியாது என்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவம் படிக்க தகுதி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

நாட்டில் உள்ள மருத்துவ படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையைவிட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெறுவார்கள் என்றும் எனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவ சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் பல்வேறு படிப்புகளை படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web