"ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க அனுமதி கிடையாது!"

தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமித்துக் கொள்ள யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது!
 
forest

தற்போது நம் தமிழ்நாட்டில் உள்ள பல வனப்பகுதிகளில் அதிகமாக  கட்டடங்களும் சாலைகளும் போடப்பட்டு வருகின்றன. மேலும் பல பகுதிகளிலும் வனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகின்றன. இதனால் பல வன விலங்குகள் காட்டை விட்டு வெளியே வருகிறது என்றும் அவர்கள் புகார் அளிக்கின்றனர். ஆனால் உண்மையில் சொல்லவேண்டுமென்றால் அவர்களே அவைகளின் வாழ்விடங்களில் புதிதாக கட்டடங்கள் சாலைகள் போட்டு அவை ஊருக்கு வருவதாக கூறுவதுபோல் உள்ளது என்றே கூறலாம்.highcourt

 இது குறித்து தற்போது சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் நீலகிரி வன ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் இத்தகைய உத்தரவினை ஹைகோர்ட் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒரு அங்குலவனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கடும் கண்டனத்துக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுக்கப்பட்டது.

மேலும் இதனை வனத்துறையினர் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறப் படுகிறது. மேலும் நடுவத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது .மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தினை உடனடியாக மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் விரைந்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் அதை உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web