21 மற்றும் 22ம் தேதிகளில் கிடையாது;தள்ளிப்போனது சி.ஏ. எக்ஸாம் காரணம் கொரோனா!

மே 21 மற்றும் 22ம் தேதிகளில் நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது!
 
21 மற்றும் 22ம் தேதிகளில் கிடையாது;தள்ளிப்போனது சி.ஏ. எக்ஸாம் காரணம் கொரோனா!

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு உத்தரவுகள் பல்வேறு மாநில அரசுகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். காரணம் என்னவெனில் இந்தியாவில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஏனென்றால் இந்தியாவில் பெருமுயற்சியால் கடந்தாண்டில் கட்டுப்படுத்தப்பட்ட வைரஸ் கொரோனா. ஆனால் மீண்டும் இந்தியாவில் கொரோனா எழுந்துள்ளது. மேலும் குறிப்பாக கொரோனா இரண்டாவது அலையாக தோன்றி மக்களுக்கு மிகுந்த இன்னல்களை கொடுத்து வருகிறது.corona

இதனால் பல மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்து வருகின்றனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ம் ஒரு சில மாநிலங்களில் முழுநேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மாணவர்களுக்கு உதவும் வகையில் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு தனது சில தினங்கள் முன்பாக ரத்து செய்யப்பட்டது.இது போன்று பல தேர்வுகளும் இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டன.

அதை தொடர்ந்து இந்தியாவில் தரமான பாடமாக காணப்படும் சி.ஏ தேர்வும் தற்போது நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெறவிருந்த சி.ஏ தேர்வுகளை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு உள்ளது. மேலும் கொரோனா  அதிகம் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web