மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் ரத்து: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவ்வப்போது புதுப்புது நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்றும், ஒரு மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இபாஸ் அவசியம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
 

மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் ரத்து: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவ்வப்போது புதுப்புது நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நாளை முதல் தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்றும், ஒரு மாவட்டத்தை விட்டு மற்ற மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இபாஸ் அவசியம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கொரோனா பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டுப்பாடு ஜூன் 30 வரை செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே இனிமேல் ஒரே மண்டலத்துக்குள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இபாஸ் இருந்தால் மட்டுமே இனி வெளியே செல்ல முடியும் என்ற நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவே பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.

From around the web