அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  கூட்டம்!

சொந்த ஊர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர் வடமாநில தொழிலாளர்கள்!
 
அச்சத்தில் வடமாநில தொழிலாளர்கள்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம்!

மனிதனின் கண்ணுக்கு தெரியாமல் மனிதனின் உடலுக்குள் சென்று இறுதியில் மனிதனை உயிர் இழக்க வைக்கிறது ஆட்கொல்லி நோய் ஆகிய கொரோனா. தற்போது கொரோனா பல நாடுகளில் உயிர் பலி எண்ணிக்கையை அதிகரித்து வருவது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் கொரோனா நோயானது முதன் முதலில் இந்தியாவில் கடந்த ஆண்டில் வர தொடங்கியது. இந்தியாவின் பெரும் முயற்சி ஊரடங்கு திட்டத்தின் மூலம் கொரோனா நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

north indians

  ஆயினும் சில தினங்களாக கொரோனா தாக்கமானது மீண்டும் இந்தியாவில் இரண்டாவது அலையாக எழுந்து மக்களை மேலும் துன்பத்திற்கு தள்ளியது. மேலும் இந்தியாவில் ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. மேலும் நம் தமிழ்நாட்டிலும் இந்நோயானது மீண்டும் அதிகரித்து மக்களை பெரும் சோகத்தில் தள்ளியுள்ளது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கொரோனா தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு பல கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் போக்குவரத்து கழகம் சார்பில் சில விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன. இந்நிலையில் தற்போது வட இந்திய தொழிலாளர்கள் சிலர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதாகவும் கூறி குவிந்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழகத்தில் வேலை செய்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல விரும்புவதாக கூறப்படுகின்றனர். மேலும் அவர்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்ற அச்சத்தின் காரணமாக தங்கள் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

From around the web