சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்தாது!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் கால் பதித்தாலும், ஏப்ரல் மாத இறுதிவரை மிதமான எண்ணிக்கையிலேயே தொற்று இருந்தது. அதன்பின்னர் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கொரோனாவானது தீவிரமானது. இருப்பினும் இந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா கட்டுக்குள் இருக்கக் காரணம் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார மையத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் நோயை கட்டுப்படுத்துவதற்காக விதித்த விதிமுறைகள்தான். முகக்கவசம் அணிவது, கிளவுஸ் அணிவது, சானிட்டசைர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியினைக்
 
சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்தாது!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் கால் பதித்தாலும், ஏப்ரல் மாத இறுதிவரை மிதமான எண்ணிக்கையிலேயே தொற்று இருந்தது. அதன்பின்னர் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் கொரோனாவானது தீவிரமானது.

இருப்பினும் இந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா கட்டுக்குள் இருக்கக் காரணம் மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார மையத்துடன் இணைந்து இந்திய அரசாங்கம் நோயை கட்டுப்படுத்துவதற்காக விதித்த விதிமுறைகள்தான்.

சாதாரண துணியால் ஆன முகக்கவசம் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்தாது!!

முகக்கவசம் அணிவது, கிளவுஸ் அணிவது, சானிட்டசைர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் போன்றவைகளே நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் காரணமாகும். துவக்க காலத்தில் பலர் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றாலும், தற்போது தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால் சாதாரண துணியால் ஆன முகக்கவசத்தை பயன்படுத்துவதால் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது, “துணிகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் என்பது நாம் மட்டும் தனியாகப் பயணிக்கும்போது பயன்படுத்தலாம். ஆனால் மருத்துவ ரீதியான முகக்கவசம் தடுக்கும் அளவு கிருமியினை, சாதாரண துணி தடுக்காது. இதனால் முடிந்தவரை அனைவரும் சாதாரண துணி முகக் கவசத்தைத் தவிர்க்கவும்” என்று கூறியுள்ளார்.

From around the web