"ஒன்னு இல்ல ரெண்டு மகிழ்ச்சியான செய்தி" பதினோராம் வகுப்பு!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு!
 
"ஒன்னு இல்ல ரெண்டு மகிழ்ச்சியான செய்தி" பதினோராம் வகுப்பு!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்பொழுதும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற வில்லை காரணம் என்னவெனில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவித்த நிலையில் அதனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் சில வாரங்கள் அது கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

students

கொரோனாநோயின் தாக்கம் அதிகரிப்பதால் தேர்வானது தள்ளி போய் உள்ளது. மாணவர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.மேலும் பத்தாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும்.

அதற்காக தற்போது 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இதனை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால் பதினோராம் வகுப்பு மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

From around the web