புதுவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: முதல்வர் நாராயணசாமி வெற்றி பெறுவாரா?

 

சமீபத்தில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக பதவி ஏற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று புதுவை முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வென்றது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்த திமுக ஒன்பது இடங்களில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்றது. இதனை அடுத்து 17 உறுப்பினர்கள் என்ற அளவில் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது 

pudhuvai

இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் திமுக எம்எல்ஏ ஒருவரும் என ஆறு பேர் ராஜினாமா செய்து விட்டார்கள். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போது 11 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருப்பதால் ஆட்சி கிட்டத்தட்ட கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு புதுவையில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

புதுவையில் மே மாதம் சட்டமன்றத்தின் காலம் முடிவடைவதால் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்ற நிலையில் ஆட்சி கவிழ்ந்தால் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

From around the web