மின்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் கிடையாது: தமிழக அரசு

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் முழு அடைப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கட்ட அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் இந்த நான்கு
 
மின்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் கிடையாது: தமிழக அரசு

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் முழு அடைப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கட்ட அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் இந்த நான்கு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் மின் கட்டணத்தை காட்டுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடுவதால் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. முழு லாக்டவுன் இல்லை என்றாலும், நாடு முழுவதும் ஜூன் 30 வரை லாக்டவுன் இருப்பதால் ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

From around the web