நாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்

நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு புதிய தளர்வுகளையும் தமிழக அரசு இன்று காலை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றும் தனியார் பேருந்து கட்டணம் மட்டும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும்
 
நாளை முதல் பேருந்துகளை இயக்க மாட்டோம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்

நாளை முதல் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு புதிய தளர்வுகளையும் தமிழக அரசு இன்று காலை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்றும் தனியார் பேருந்து கட்டணம் மட்டும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. 60% பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்றும் அந்த சம்மேளனம் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு ஒரு முடிவு எடுத்த பின்னரே தனியார் பேருந்துகள் இயங்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நாளை முதல் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web