நாளை முதல் பேருந்துகள் ஓடுவதில் திடீர் சிக்கல்: பொதுமக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொண்டனர். இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசும் மத்திய அரசும் பொதுமக்களின் நலன் வேண்டி பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று தமிழக அரசு அறிவித்த தளர்வுகளில் ஒன்று நாளை முதல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் மாவட்டங்களுக்கு இடையில் மட்டும்தான் பேருந்துகள் இயக்கப்படும் என்று
 

நாளை முதல் பேருந்துகள் ஓடுவதில் திடீர் சிக்கல்: பொதுமக்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் பல்வேறு சிக்கல்களை பொதுமக்கள் எதிர்கொண்டனர். இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசும் மத்திய அரசும் பொதுமக்களின் நலன் வேண்டி பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு அறிவித்த தளர்வுகளில் ஒன்று நாளை முதல் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் மாவட்டங்களுக்கு இடையில் மட்டும்தான் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அதிரடியாக தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மட்டும் பேருந்துகளை இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு அனுமதி கொடுத்தும் தனியார் பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பு சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றாலும் மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web