கொரோனா பரவுவதால் தமிழகத்தில் தேர்தல் ஒத்திவைப்பா? தேர்தல் ஆணையர் விளக்கம்!

 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பதும், இந்த அறிவிப்பை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு, வேட்பாளர் பட்டியல்,  பிரச்சாரம் என விறுவிறுப்பாக தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. அரசியல் கூட்டம் ஆங்காங்கே நடப்பதால் அதில் பொதுமக்கள் மாஸ்க் இன்றி, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கலந்து கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

sathya pradha

இதனை அடுத்து தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்றும் ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் கூறியபோது ’கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து எந்த ஆலோசனை மேற்கொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்பது உறுதியாகி உள்ளது

From around the web