மருத்துவமனையில் இடமில்லை! மரத்திலே கட்டில் போட்டு  சிகிச்சை அளிக்கும் இளைஞர்!

தனியார் மருத்துவமனைக்கு போதிய பணம் இல்லாததால் மரத்திலே கட்டில் போட்டு தனிமைப்படுத்தி கொண்டார் சிவா!
 
மருத்துவமனையில் இடமில்லை! மரத்திலே கட்டில் போட்டு சிகிச்சை அளிக்கும் இளைஞர்!

தற்போது நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பிக் காணப்படுகின்றன. காரணம் என்னவெனில் தற்போது கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி நோயின் தாக்கம் நாடெங்கும் அனைத்து திசைகளிலும் வீசுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக பின்பற்றியும் வருகின்றனர். ஆயினும் இந்நோயானது பலருக்கு தெரிவது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இந்நோய் தாக்கம் நாளுக்குநாள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாகி வருகிறது.corona

பல அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் ஏழை மக்கள் தனியார் மருத்துவமனை செல்லும் அளவிற்கு பணம் இல்லாததால் தங்களை தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் புதுவிதமாக தனிமைப்படுத்தும் சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவுகிறது. மேலும் அவர் தன் வீட்டில் உள்ள மரத்தில் தனிமைப்படுத்திக்  கொண்டார். இச்சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார் சிவா. மேலும் இவருக்கு கடந்த வாரம் கொரோனா கண்டறியப்பட்டது.

அதனால் இவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். ஆனால் இவருக்கு அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளிகள் இருந்ததால் இவரை தனியார் மருத்துவமனை செல்ல அங்குள்ள மருத்துவர்கள் கூறினர். ஆனால் இவரால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்  கொண்டார்.

 எனினும் இவரது வீடு சிறியதாக இருப்பதால் வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது கட்டில் ஒன்றினை வைத்து மரத்தின் மேல் ஏறி அந்த அங்கு தனிமைப்படுத்திக்  கொண்டார் .மேலும் இவருக்கு உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் வழங்கி வருகின்றனர். இது போன்று புதுவிதமாக இளைஞர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவிகிறது.

From around the web