உண்மையாக உழைப்பவர்களுக்கு இடமில்லை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

 

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணையவிருப்பதை அடுத்து சற்றுமுன் அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில்  
காங்‌, செய்தி தொடர்பாளர்‌ பதவி பறிக்கப்பட்ட நிலையில்‌ அக்கட்சியில்‌ இருந்து விலகினார்‌ குஷ்பு. அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2014 தேர்தலில்‌ தோற்று பின்னடைவில்‌ இருந்த போது காங்கிரசில்‌ என்னை இணைத்துக்‌ கொண்டேன்‌. பதவி, பணம்‌, புகழ்‌ போன்ற காரணங்களுக்காக நான்‌ காங்கிரசில்‌ இணையவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில்‌ இருக்கும்‌ சிலருக்கு மக்களுடன்‌, தொண்டர்களுடன்‌ எந்த தொடர்பும்‌ இல்லாமல்‌ உள்ளனர்‌

காங்கிரசுக்காக உண்மையாக உழைக்கும்‌ என்னைப்‌ போன்றவர்களை மேலிடத்தில்‌ சிலர்‌ ஒடுக்க நினைக்கிறார்கள். நீண்ட காலமாக யோசித்து காங்கிரஸ்‌ கட்சியில்‌ இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். காங்கிரஸ்‌ கட்சியில்‌ வாய்ப்பு அளித்த சோனியா, ராகுல்‌ காந்திக்கு நன்றி 

இவ்வாறு குஷ்பு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

From around the web