திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி; பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து தமிழக அரசும் மத்திய அரசும் அறிவிப்பு செய்து வருகிறது என்பது தெரிந்ததே குறிப்பாக கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது என்பதும், அலுவலகங்கள் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே. பேருந்து ரயில் போக்குவரத்து மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினர் மற்றும்
 

திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி; பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு தளர்வுகள் அடுத்தடுத்து தமிழக அரசும் மத்திய அரசும் அறிவிப்பு செய்து வருகிறது என்பது தெரிந்ததே

குறிப்பாக கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது என்பதும், அலுவலகங்கள் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது என்பதும் தெரிந்ததே. பேருந்து ரயில் போக்குவரத்து மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்க வேண்டும் என திரையுலகினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’இப்போதைக்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே சின்னத்திரை படப்பிடிப்புக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உள் அரங்குகள் போதுமானது என்பதால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சினிமா படப்பிடிப்புகள் வெளிப்புற படப்பிடிப்பு நடைபெறும் என்பதாலும் அதிக நபர்கள் படப்பிடிப்புக்கு தேவை என்பதாலும் இப்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் இப்போதைக்கு திரை அரங்குகளும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியிஅ நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web