அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: திடீரென பின்வாங்கிய தமிழக அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் ஜூலை 13ஆம் தேதிக்கு பின் நடத்தப்போவதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறிய நிலையில் இன்று அளித்த பேட்டியில் ஆன்லைன் வகுப்புகள் இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் இன்று செய்தியாளா்களை சந்தித்தபோது ’தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை என்றும், டிவி மூலம் மட்டுமே பாடம் கற்பிக்க திட்டம் என்றும் கூறியுள்ளார். மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே
 

அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: திடீரென பின்வாங்கிய தமிழக அரசு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் ஜூலை 13ஆம் தேதிக்கு பின் நடத்தப்போவதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறிய நிலையில் இன்று அளித்த பேட்டியில் ஆன்லைன் வகுப்புகள் இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் இன்று செய்தியாளா்களை சந்தித்தபோது ’தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை என்றும், டிவி மூலம் மட்டுமே பாடம் கற்பிக்க திட்டம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள் என்றும், 12-ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வை நடத்தாமல் எப்படி ரிசல்ட் அறிவிக்க முடியும் என்றும், தேர்வு எழுதாத மாணவர்களை எப்படி தேர்ச்சி அடைய செய்ய முடியும்? என்றும், தேர்வு நடத்த அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார்

தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளது என்றும், அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்றும் நமது அண்டை மாநிலமான கர்நாடகா தற்போது தேர்வை நடத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web