இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை: உதயநிதியின் கிண்டல்!

 

கடந்த சில மாதங்களாகவே உதயநிதி தனது டுவிட்டர் மூலமாக ஆவேசமான அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து கிண்டலும் ஆவேசமும் கூடிய டுவிட்டுகளை உதயநிதி பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது:

வேளாண் மசோதா, எட்டு வழிச்சாலை, ஸ்டைர்லைட் துப்பாக்கி சூடு, நீட் விலக்கு நாடகம்... இப்படி இந்த ஆட்சியை தக்கவைக்க நான்தான் அதிகம் உழைக்கிறேன்’- இது ஒருவர். ‘குடியுரிமை திருத்தச்சட்டம், இந்தி திணிப்பு. இருந்தும் ஆட்சிக்காக அவரைவிட நானே சிறந்த அடிமையாக இருக்கேன்’- இது இன்னொருவர் அடிமைகள் தூது நடக்கிறது.

‘நீங்க அவர்னு இல்லை. நாம எல்லாருமே அடிமை என்பதால்தான் ஆட்சி ஓடிட்டு இருக்கு. சேகர் ரெட்டி, கன்டெயினர் லாரி, குட்கா டைரி, ஆர்.கே நகர் ரெய்டு, பொள்ளாச்சி கேஸ், கொடநாடு கொலை, பி.எம். கிசான் ஊழல்... பதிலுக்கு இப்படி அவர்களும் அன்பளிப்பு அளிக்கிறார்கள். 

இன்னொரு கூவத்தூருக்கோ, தர்மயுத்தத்துக்கோ யாரும் தயாரில்லை. மிச்சமிருக்கும் மாதத்தையும் கமிஷன் கலெக்ஷனு ஓட்டிடுவோம்.’ இப்படியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தள்ளது. இதில் கொரோனாதான் பாவம். கடந்த சில நாட்களாக அது மக்களை தீண்டும் வேகம் அதிகரித்தாலும் அதை சீண்டத்தான் யாருமில்லை.

இவ்வாறு உதயநிதி தெரிவித்துள்ளார்.

From around the web