தடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை ராதாகிருஷ்ணன் பேட்டி!

கொரோனா தடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்!
 
தடுப்பூசியால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை ராதாகிருஷ்ணன் பேட்டி!

மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வைரஸ் கிருமிகள் கண்ணுக்கு தெரியாமல் பல்வேறு தரவுகளை கொடுக்கும் நோயாக கொரோனா உள்ளது. கொரோனா நோய்  சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சீன நாட்டில் முழுவதும் நோயின் தாக்கம் இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் உலக நாடுகளிலும் பரிசோதித்துப் பார்த்தபோது உலக நாடுகளிலும் கொரோனா நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.இதனால் உலக நாடுகளே மிகவும் அச்சத்தில் இருந்தனர்.

covaxin

மேலும் இந்தியாவிலும் நோய் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது எந்த ஒரு அச்சமுமின்றி நாடெங்கும் முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தி கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது இந்நோயின் தாக்கம் அதிகம்  பரவத்தொடங்கியது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்தியாவில் குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நோயின் தாக்கம் அல்லது வீரியம் உள்ளதாக அதிகமாக பரவுகிறது.

மேலும் தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகமாக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனாநோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார். அவர் தற்போது செய்தியாளர்களை சென்னையில் சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர் கூறினார் இதுவரை  கொரோனா தடுப்பூசியினால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதும் இல்லை எனவும் அவர் கூறினார்.

From around the web