நாளை மறுநாள்  முழு ஊரடங்கு தேவையில்லை!காரணம் இதுதான்:

நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் எடுத்துள்ளது!
 
நாளை மறுநாள் முழு ஊரடங்கு தேவையில்லை!காரணம் இதுதான்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. மேலும் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் பாதுகாக்கப்படுகிறது. எனினும் தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகமாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் வாக்கு எண்ணப்படும் தேதி மாற்றப்படும் எனவும் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேதியில் மாற்றம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதனால் தமிழகத்தில் அதிகமாக கொரோனா இருக்கும் என பல வதந்திகள் பரவின.may 1

மேலும் தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு உள்ளது ஞாயிறு கிழமைகளில் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் வாக்கு எண்ணப்படும் மே இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு இருக்குமா? இல்ல வாக்கு எண்ணிக்கையை பாதிக்குமா? என கேள்விகள் எழுகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையாக தற்போது தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை மறுநாள் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்றும் ஐகோர்ட்டில் கூறியுள்ளது.

காரணம் என்னவெனில் தமிழகத்தில் தொழிலாளர் தினம் பொது விடுமுறை என்பதால் மே 1ஆம் தேதி அன்று முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என அரசு தகவல் அளித்துள்ளது. ஊரடங்கு குறித்து நாளை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் மேலும் மே 1 மற்றும் 2 தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை ஐகோர்ட் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் தமிழக அரசு தனது தரப்பிலிருந்து கூறியது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை துவங்குவதால் முழு ஊரடங்கு அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. இதனால் நாளை மறுநாள்  முழு ஊரடங்கு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web