இனி ‘அமேசான் பே’விலும் ரயில் டிக்கெட்: பயனாளிகள் மகிழ்ச்சி

 

அமேசான் நிறுவனம் தனது பிசினஸை இந்தியாவில் ஒவ்வொரு படியாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்தியன் ரயில்வேயுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இனி அமேசான் பே’விலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே விமானங்கள் பஸ் டிக்கெட்டுகளை அமேசான் மூலம் முன்பதிவு செய்யலாம் என்ற வகையில் தற்போது ஐஆர்சிடிசி உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இனிமேல்  இந்தியாவில் ஓடும் எந்த ரயிலுக்கும் அமேசான் பே’ மூலம் ரயிலில் முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது 

அதுமட்டுமின்றி அமேசானில் பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில்களில் இருக்கும் இருக்கைகள், பர்த் வசதி குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை டவுன்லோட் செய்யவும் ரத்து செய்யவும் இதில் வசதி உள்ளது

அமேசான் வாலட்டில் உள்ள பணத்தை வைத்து அமேசான் மூலம் முதன்முதலாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பயனாளிகளுக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது 

இதுவரை ரயில்கள் முன்கையில் பயணம் செய்ய முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி செயலியை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த பயணிகளுக்கு தற்போது புதிய வசதி கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web