என் மகன் என்னை கைவிட்டதால்  இனி பெட்ரோல் பங்க் கிடையாது! தர்ணா போராட்டத்தில் முதியவர்!!

தன் மகன் தன்னை கைவிட்டதால் அவரது இடத்தில் அமைந்திருந்த பெட்ரோல் பங்கின் இயங்காது என்று முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
 
petrol

தற்போது நம் தமிழகத்தில் அன்பானது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் உள்ள பல மக்கள் மனதிலும் அன்பு அது குறைந்து கொண்டே வருகிறது. முன்னொரு காலத்தில் சொத்துக்காக தகப்பன் கொல்லப்படுவதாக காணப்பட்டது. ஆனால் தற்போது தகப்பன் மகன் குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் போன்றவை அதிகமாக நிகழ்வது நாள்தோறும் தெரிய வருகிறது. இதனால் தற்போதுள்ள காலத்தில் அன்பானது இல்லை என்றே கூறலாம்.petrol

முதியவர் ஒருவரை பார்ப்பேன் என்று சொல்லி அவரது மகன் நடுத்தெருவில் விட்டதால் அந்த முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன்படி நாகை மாவட்டம் சேர்ந்த ரத்தினவேல் என்ற முதியவர் தனது நிலத்தில் பெட்ரோல் பங்க் இயக்க தனது மகனுக்கு அனுமதி அளித்திருந்தார். மேலும் இந்த பெட்ரோல் பங்க் நாகை மாவட்டம் கச்சனம் சாலை பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் அவனது மகனோ அவரை கைவிட்டதால் அந்த 70 வயது முதியவர் பெட்ரோல் பங்க் எங்க கூடாது என்று அதனை சுற்றி வேலி அமைத்து உள்ளார்.

இதனை அறிந்த விசாரணைக்கு வந்த கோட்டாட்சியர் பெட்ரோல் பங்கை சுற்றி அமைந்திருந்த வேலிகளை தகர்த்தெறிந்தார். மேலும் இத்தகைய செயலில் ஈடுபடும் போது முதியவர் ரத்தினவேல் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கோட்டாட்சியர் தரப்பிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் இயங்குவதற்கு அனுமதி என்பதனால் பெட்ரோல் பங்குகள் இயங்கலாம் என்று கூறினார். மேலும் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு அழைத்தார் கோட்டாட்சியர். மேலும் விசாரணை முடிவில் இந்த பிரச்சனை முடியும்வரை பெட்ரோல் பங்கில் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

From around the web