இனி 100 நாள் வேலையில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது!

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கூடாது என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது!
 
இனி 100 நாள் வேலையில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது!

முன்னொரு காலத்தில் நாடெங்கும் மிகவும் பெயர் பெற்றவர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் காணப்பட்ட இருந்தனர் விவசாயிகள். ஆனால் காலம் செல்ல செல்ல விவசாயிகளின் மதிப்பும் அவருக்கு உரிய மரியாதையும் சிறிது சிறிதாக இழந்து வருகிறது. மேலும் விவசாயிகள் மீது அதிகப்படியான கடன் சுமை சுமத்தப்பட்டு பல பகுதிகளில் விவசாயிகள் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். மேலும் ஒரு விவசாயி தற்கொலை என்பது அவரோடு முடியாது அந்த நாட்டையே சாரும்.labours

ஏனென்றால் அவர் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. இந்த நிலையில் விவசாயிகளின் தற்கொலையை குறைக்க விவசாயிகளின் உருவாக்கப்பட்ட திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு. இந்த 100 நாள் வேலை வாய்ப்பின் மூலம் பல தொழிலாளர் விவசாயிகள் வறுமையில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் பயன் அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் இந்த 100 நாள் வேலைகளில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் ஆண்களால் பல்வேறு பகுதிகளில் குட்டைகள் குளங்கள் தூர்வார பட்டன.

 மேலும் அவை மழை காலத்தில் நீரை சேமித்து வைத்து குடிநீருக்கு பற்றாக்குறையும் போகப்பட்டது. மேலும் அவர்களால் சாலையோரங்களில் மரங்கள் நட்டப்பட்டன. இந்நிலையில் தற்போது ஊரக வளர்ச்சித் துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளது.மேலும் குறிப்பாக இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்கவும்ஊரக வளர்ச்சி துறை அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து தற்போது ஊரக வளர்ச்சித்துறை இத்தகைய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web