கொரோனா பரிசோதனை செய்ய இனி மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை: அதிரடி அறிவிப்பு 

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும் 2.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்தியாவில்40 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்களின் பரிந்துரை கட்டாயம் என்ற நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சற்றுமுன் தெரிவித்துள்ளது

இதன்படி கொரனோ பரிசோதனை செய்ய விரும்புபவர்கள், தங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக உணர்பவர்கள், மேலும் பயணம் செய்பவர்கள் தாங்களாகவே சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web