இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

 
aadhar

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொது மக்களை காப்பாற்ற தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்றே மிகச் சிறந்த வழி என மத்திய மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. இதனை அடுத்து லட்சக்கணக்கான மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் அட்டை அவசியம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஆதார் அட்டை இல்லாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இனி ஆதார் எண் கேட்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை இல்லாதவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கொரோனா தடுப்பூசி செய்துகொள்வதற்கு ஸ்மார்ட்போன் உதவியுடன் கோவின் செயலியில் முன்பதிவு செய்வது அவசியம் என்ற விதியில் இருந்தும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு ஆதார், கோவின் பதிவு இல்லாமலேயே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web