எத்தனை அவதாரம் எடுத்தாலும் ஸ்டாலினால் வெல்லமுடியாது-முதல்வர்!

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என கூறி மாயையில் இருக்கிறார் ஸ்டாலின்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அதற்கான ஏற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும்சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு ஏற்பாடுகளை பிறப்பித்து வருகிறது. இதில் பல கட்சிகளும்உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

admk

மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார். அதற்கான அவர் வேட்புமனு தாக்கல் செய்து தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி மற்றும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட சென்றிருந்தார். அப்போது அவர் கூறினார், எத்தனை அவதாரம் எடுத்தாலும் மு க ஸ்டாலின் ஆல் வெல்ல முடியாது என பரப்புரையில் முதல்வர் கூறினார். மேலும் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என கூறி ஒரு மாயையில் இருக்கிறார் மு க ஸ்டாலின் எனவும் முதல்வர் கூறினார். மேலும் அதிமுக தனது வலிமையான மற்றும் வெற்றி கூட்டணி என முதல்வர் பழனிசாமி கூறினார். மேலும் திமுக குடும்ப அரசியல் செய்வது போல் அதிமுக குடும்ப அரசியல் செய்யவில்லை எனவும் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web