"நோ மலையாளம்" உத்தரவு வாபஸ்!! மலையாளத்தில் பேசலாம்!!!

டெல்லி அரசு மருத்துவமனை செவிலியர்கள் இந்தி ஆங்கிலத்தில் மட்டும் பேச வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது
 
gb pant

தற்போது நம் இந்தியா சுதந்திரம் அடைந்தபின் புதிது புதிதாக கலாச்சாரங்கள் மொழிகள் அனைத்தும் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் பல மொழிகள் அங்கீகரிக்கப்பட்டு காணப்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் ஒரு சில மொழிகளில் அங்கீகரிக்கப்படாத  எழுத்து வடிவில் இல்லாமலும் காணப்படுகின்ற நிலையில் இந்திய அரசானது பல்வேறு மாநிலங்களில் அவர்கள் மொழி பேசுவதற்கு மொழி சுதந்திர இந்தியாவில் கிடைப்பது மிகவும் பெருமை அடைகிறது.  தற்போது வேறு மொழியில் பேசக் கூடாது என்றும்  கூறுகையில் கண்டனம் தெரிவிப்பர்.delhi

இந்நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் மொழி சுதந்திரம் இல்லாதது அனைவருக்கும் வேதனை அளிக்கிறது இச்சம்பவம் டெல்லி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. அதன்படி டெல்லி அரசு மருத்துவமனை செவிலியர்கள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது. தற்போது அதனை வாபஸ் பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி டெல்லி அரசு மருத்துவமனை செவிலியர்கள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று உத்தரவு தற்போது ரத்தானது.

மேலும் செவிலியர்கள் மலையாள மொழியில் பேசக் கூடாது என்ற உத்தரவை டெல்லியின் ஜிபி பந்த்  இன்ஸ்டிட்யூட் திரும்பப் பெற்றது. மேலும் டெல்லியில் பந்த் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் செவிலியர்களின் பெரும்பான்மையானோர் மலையாளத்தில் உரையாடுவதாக கூறப்படுகிறது. மேலும் மலையாளம் தங்களுக்கு தெரியாது என்பதால் சிரமமாக உள்ளது என்று நோயாளி ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் அதையும் மீறி மலையாளத்தில் பேசினால் கடும் நடவடிக்கை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு பல செவிலியர்களின்  சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து தற்போது இந்த உத்தரவு ரத்தானது.

From around the web